2 திருமணம், 3 குழந்தைகள் இருக்கா..புகைப்படம் வெளியிடுங்க!! பதிலடி கொடுத்த சத்யராஜ் மகள்...
திவ்யா சத்யராஜ்
நடிகர் சத்யராஜின் மகளும் திமுக உறுப்பினருமான திவ்யா சத்யராஜ், சில நாட்கலுக்கு முன் ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணை பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள்ளாமலேயே அவருடன் இணைந்து வாழலாம், குழந்தை கூட பெற்றுக்கொள்ளலாம்.

திருமணம் என்பது அவசியமான ஒன்றில்லை என்று பேசியிருந்தார். இதற்கு பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், பயில்வான் ரங்கநாதன், திவ்யா சத்யராஜுக்கு திருமணம் நடந்து விவாகரத்து ஆகிவிட்டது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் இதனை அறிந்த திவ்யா சத்யராஜ், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
எனக்கு 3 குழந்தைகள்
அதில், அன்புள்ள யூடியூபர்களே, உங்களில் சிலர் நான் 2 திருமணம் செய்து, எனக்கு 3 குழந்தைகள் இருக்கிறது என்று கூறி யூடியூபில் வீடியோக்களை வெளியிட்டுள்ளீர்கள். அதனால், என்னுடைய 2 திருமணங்கள், என் 3 குழந்தைகளின் புகைப்படங்களை தயவு செய்து வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நான் இதற்கு கோபமாகவோ, வருத்தமாகவோ இல்லை, இது மிகவும் வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் இருக்கிறது. எனக்கு வழங்கிய இந்த பொழுதுபோக்கிற்கும், என் சாதாரண தோசையில் நீங்கள் சேர்த்துள்ள இந்த கூடுதல் மசாலாவிற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று பதிலடி கொடுத்துள்ளார் திவ்யா சத்யராஜ்.