ஏன் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை? 43 வயதாகும் நடிகை ரம்யா ஓபன் டாக்

Divya Spandana
By Karthick Raja Sep 09, 2026 04:46 AM GMT
Report

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் திவ்யா ஸ்பந்தனா. ஆனால், இவரை ரம்யா என்றுதான் பலருக்கும் தெரியும். சிம்பு நடிப்பில் வெளியான 'குத்து' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன்பின் கிரி, பொல்லாதலன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் நடிகை ரம்யாவிடம், இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது.

ஏன் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை? 43 வயதாகும் நடிகை ரம்யா ஓபன் டாக் | Divya Spandana About Her Marriage

அதற்கு அவர், "திருமணம் மட்டுமே என்னுடைய அடையாளத்தை தீர்மானித்துவிடாது. திருமணம் செய்துகொள்ளாமல் கூட மகிழ்ச்சியாக வாழ முடியும், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதுதான் மிகவும் முக்கியமான விஷயம்" என்றார்.

மேலும் பேசிய அவர், "நல்ல நட்பு, ஒரே மாதிரியான சிந்தனை மற்றும் ஆழமான புரிதல் இருந்தால் திருமணம் ஒரு நல்ல முடிவாக இருக்கும். ஆனால், எனக்கு பொருத்தமான நபரை நான் இன்னும் சந்திக்கவில்லை" என கூறியுள்ளார்.

ஏன் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை? 43 வயதாகும் நடிகை ரம்யா ஓபன் டாக் | Divya Spandana About Her Marriage

திருமணம் குறித்து நடிகை ரம்யா பேசியுள்ள இந்த கருத்து தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.