வலுக்கட்டாயமாக நடிகையுடன் காதல்!! ராதிகாவையும் விட்டுவைக்காத நடிகர் சுதாகரின் தற்போதைய நிலை...
தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று புகழப்பட்டு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் பாரதிராஜா. இவர் இயக்கத்தில் அறிமுகமாகி தற்போது டாப் இடத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் பலர் இருக்கிறார்கள். அந்தவரிசையில் 1978ல் கிழக்கே போகும் ரயில் படத்தில் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகர் தான் சுதாகர்.
தெலுங்கு பேசும் நடிகரை பாரதிராஜா அறிமுகம் செய்து வைத்தார். இதன்பின் தென்னிந்திய சினிமாவில் டாப் இடத்தில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் சுதாகர்.
சுதாகர் குறித்து பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் அளித்த பேட்டியில், நடிகை ராதிகாவை காதலித்து பின் பிரிந்துவிட்டார். அதன்பின் நடிகை ஜெயசித்ராவை, காதலிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி, வலுக்கட்டாயமாக ரோஜா பூ கொடுத்து காதலித்து வந்துள்ளார் என்றும் கூறியிருந்தார்.
கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதற்கு 3 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று சுதாகர் கேட்டதாகவும் அதற்கு நான் எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறேன் எல்லாம் உனக்குத்தானே என்று ஜெயசித்ரா சொன்னதாகவும் அதன்பின் கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சுதாகர்.
தற்போது அவர் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.