நெப்போலியன் மகனுக்கு இல்லற வாழ்க்கை சாத்தியமா? விஷயம் தெரிந்து அக்ஷயா எடுத்த முடிவு.. மருத்துவர் விளக்கம்!!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நெப்போலியன். இவருடைய மூத்த மகன் தனுஷ், நான்கு வயதில் இருக்கும்போது தசை சிதைவால் பாதிக்கப்பட்டார்.
தற்போது 25 வயதாகும் இவருக்கு, திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. தனுஷ் திருமணம் செய்வது சரி என்றும் சிலர், திருமணம் செய்யும் அந்த பெண்ணின் வாழ்க்கை அழிந்துவிடும் போன்ற விமர்சனங்கள் தொடர்ந்து வருகிறது.
அதுமட்டுமின்றி, தனுஷால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாது என்றும் சிலர் சமூக வலைத்தளங்களில் தெரிவித்தனர்.
இந்நிலையில் இது குறித்து பேசிய மயோபதி மருத்துவமனையின் மருத்துவர் டேனியல், நெப்போலியன் தனது மகனின் திருமணம் செய்ய இருப்பது பற்றி மருத்துவரிடமும் இருந்து உரிய ஆலோசனை செய்தார். அதனை அடுத்து தனுஷுக்கு பெண் பார்க்கப்பட்டது.
தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களால் திருமணம் செய்ய முடியாது, இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாது என்பது உண்மை அல்ல. சிலர் திருமணம் செய்துகொண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். மருத்துவரின் ஆலோசனை பெற்றுத்தான் திருமண ஏற்பாடு நடந்தது.
தனுஷும் அக்ஷயாவும் ஒருவரை ஒருவர் அலைபேசியில் தொடர்புகொண்டு பரஸ்பரமாக பேசி இந்த திருமணம் முடிவை எடுத்தார்கள். அக்ஷயாவவுக்கு தனுஷுக்கு ஏற்பட்ட நோய் பற்றி முழுமையாக தெரியும் என்று மருத்துவர் டேனியல் தெரிவித்துள்ளார்.