7 டன் கருப்பு ரதம் - அமெரிக்க புதிய அதிபரின் பீஸ்ட் கார் பற்றி தெரியுமா?

Donald Trump United States of America US election 2024
By Edward Nov 09, 2024 05:30 AM GMT
Report

அமெரிக்க அதிபர்

அமெரிக்க அதிபருக்கான வாகன அணிவகுப்பு என்பது விரிவானதாக, 40க்கும் மேற்பட்ட வாகங்கள் அதில் இடம்பெறும். இதில் புகழ்பெற்ற பீஸ்ட்-ம் அடங்கும். அமெரிக்க அதிபரின் கார்கள் பீஸ்ட், கேடிலாக் ஒன், ஃபர்ஸ்ட் கார் என்ற பெயர்களில் அழைப்பார்கள்.

7 டன் கருப்பு ரதம் - அமெரிக்க புதிய அதிபரின் பீஸ்ட் கார் பற்றி தெரியுமா? | Donald Trump Back In Beast Car All Details

இந்த வாகனங்களில் தான் குடியரசுத்தலைவர் பொதுவாக பயணிப்பார்கள். ஆனால் அதிபர் பயணிக்கும் வாகனம் எது என்று யாருக்கும் தெரியாமல் இருக்க இரண்டு பீஸ்ட் கார்களை கொண்டு பாதுகாப்பு அமைப்பு அமையும்.

பீஸ்ட் கார்

பீஸ்ட், சிறப்பான மாற்றியமைக்கப்பட்ட ஒரு வாகனம் என்பதால், குண்டு வெடுப்பு, குண்டு துளைக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

7 டன் கருப்பு ரதம் - அமெரிக்க புதிய அதிபரின் பீஸ்ட் கார் பற்றி தெரியுமா? | Donald Trump Back In Beast Car All Details

கூடுதலாக சொந்த சுற்றுச்சூழல் அமைப்பை கொண்டு ஹெர்மெட்டிகல் சீல் வைத்துள்ளதாம். 7000 கிலோ எடையுள்ல இந்த காரின் விலை சுமார் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.