அவர் விசயத்தில் மூக்கை நுழைக்காதீங்க.. அஜித்தால் மேனேஜருக்கு கண்டீசன் போட்ட விஜய்
மாஸ் நடிகராக தமிழ் சினிமாவில் திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தில்ராஜ் தயாரிப்பில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். பாதி படத்திற்கு மேல் படப்பிடிப்பு சென்று கொண்டிருக்கிறது.

வாரிசு - ஏகே61
அதேபோல் நடிகர் விஜய்யும் எச் வினோத் - போனி கபூர் கூட்டணியில் ஏகே61 படத்தில் நடித்து வருகிறார். இரு படங்களும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷிடம் ஒரு கண்டீசனை போட்டுள்ளார் விஜய்.
வினோத் மற்றும் போனி கபூரை எப்படியாவது நீங்கள் பார்க்க நேரிடும். அப்போது அவர்களிடம் எப்போது படம் வெளியாகவுள்ளது என்றும் அவர்கள் படத்தையோ நம்முடைய படத்தை பற்றியோ எதுவும் கேட்ட வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறாராம்.

கண்டிசன் போட்ட விஜய்
இதற்கு காரணம் அஜித் படத்தை பற்றி அறிய விஜய் குழு ஆர்வமாக இருக்கிறார்கள் என்று நினைக்க நேரும். அதேபோல் இதனால் நம்மை தவறாக நடிக்கவும் அவர்கள் படம் நமக்கு போட்டியாக வருவது பிடிக்கவில்லை என்றும் நினைக்க கூடும் என்று தெரிவித்துள்ளார்.
அதனால் நலம் விசாரித்துவிட்டு மட்டும் வந்துவிடுங்கள் என்று கண்டீசன் போட்டிருக்கிறார் விஜய்.