டோரதி இதுவரை செய்துள்ள வசூல்
Box office
By Karthick Raja
ரெட்ரோ திரைப்படத்திற்கு பின், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம்தான் டோரதி. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, வளர்ந்து வரும் நடிகர்கள் ரிஷிகாந்த் மற்றும் சனந்த் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒரு ஆண் திருநங்கையாக மாறுவதை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது, அவனுடன் நண்பன் எப்படி அதை ஏற்றுக்கொள்கிறான் என்கிற சென்சிடிவான கதைக்களத்தை வைத்து இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பாராட்டுகள் குவிந்தாலும், எதிர்ப்புகள் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், 7 நாட்களில் டோரதி திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 8 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.