நெப்போலியன் மகனால் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட முடியாது.. வரம்பு மீறி பேசிய பிரபலம்.. எழும் கண்டனம்!!

Actors Tamil Actors
By Dhiviyarajan Aug 02, 2024 08:05 AM GMT
Report

சமீப காலமாக பிரபல நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷின் திருமணம் தகவல்கள் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருக்கிறது.

நெப்போலியனின் மூத்த மகனான தனுஷ், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிறு வயதில் இருந்தே நடக்க முடியாமல் இருக்கிறார். அவருடைய சிகிச்சைக்காக நெப்போலியன் குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

இந்தச் சூழலில் தனுஷுக்கு திருநெல்வேலியை சேர்ந்த அக்‌ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். இவர்கள் நிச்சயதார்த்தம் சில நாட்களுக்கு முன்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய பிரபல பத்திரிக்கையாளரும் மருத்துவருமான காந்தராஜ், நெப்போலியன் மகன் தனுஷ் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட முடியாது. அவருக்கும் இருக்கும் பிரச்சனை எல்லாம் மணப்பெண்ணுக்கு சொல்லி தான் திருமணம் ஏற்பாடு நடத்தி இருப்பார்கள்.

தனுஷ் இவ்ளோ நாள் உயிரோடு இருந்ததே பெரிய விஷயம். அவருடைய நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. எதிர்காலத்தில் வேண்டுமென்றால் கண்டுபிடிக்கலாம். நெப்போலியன் மனைவி கர்ப்பமாக இருக்கும் போதே Genetic counseling சென்று இருந்தால் இந்த குழந்தை பிறந்ததை தடுத்து இருக்கலாம், குணப்படுத்தி இருக்க முடியாது. இந்த நோய்க்கு எந்த மருத்துவத்திலும் மருந்து இல்லை என்று DR. காந்தராஜ் கூறியுள்ளார்.

இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள், சார் இந்த மாதிரி பேட்டி கொடுத்து பெற்றோர்கள் மனதை புண் படுத்த வேண்டாம் என்று கமெண்ட் செய்துள்ளனர். 

நெப்போலியன் மகனால் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட முடியாது.. வரம்பு மீறி பேசிய பிரபலம்.. எழும் கண்டனம்!! | Dr Kantharaj Speak About Nepolean Son Marriage