அக்கா நடிகையால் வாய்ப்பை இழக்கும் ராணி! இதில் போதை பொருள் விவகாரம் வேறயாம்...

தமிழ் சினிமாவில் ராணி பெயற்கொண்ட அந்த நடிகை ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தை எடுத்து ஒயின் மோசமான கிளாமர் நடிகையாக திகழ்ந்து வந்தார். பின் போகப்போக்க இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு சிறிய வெற்றியையே கொடுத்து வந்த அம்மணி ஓரளவிற்கு பெயர் பெற்று வந்தார். ஆனால் தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.

கோலிவுட்டில் ராணியாக வலம் வந்த அந்த நடிகைக்கு தற்போது வாய்ப்பு கொடுக்க அனைவரும் யோசிக்கிறார்களாம். இதற்கு முக்கிய காரணம் அந்த அடல்ட் காமெடி படத்தில் நடித்தது தான் என்கிறார்கள்.

இதுவரை காமெடி படங்களில் மட்டுமே ஹீரோயினாக கலக்கி வந்த அந்த நடிகைக்கு காமெடி கலந்த அடல்ட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னதான் அடல்ட் படம் என்றாலும் நடிகையை வேறு மாதிரியான தோற்றத்தை உருவாக்கும் என்பதை அறிந்து அம்மணி நடித்து வந்தார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் அம்மணியின் அக்கா நடிகை சமீபத்தில் போதை பொருள் விவகாரதில் சிக்கி கைதும் செய்யப்பட்டார்.

இதனால் சிலர் தங்கைக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்கும் என கிளப்பி விடவே இவரை கோலிவுட்டில் புக் செய்வதை தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவர் பக்கமே செல்ல பயந்து விடுகிறார்கள். 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்