பிரபல சூர்யா பட இசையமைப்பாளரை ரகசிய திருமணம் செய்த நடிகை?.. கோபத்தில் நடிகை வெளியிட்ட பதில்..

Devi Sri Prasad Gossip Today Indian Actress
By Jai Sep 05, 2022 06:30 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக திகழ்ந்து வருபவர் தேவி ஸ்ரீ பிரசாத். டிஎஸ்பி என்று அழைக்கப்படும் இவர் சமீபத்தில் புஷ்பா படத்திற்கு பிறகு சூர்யா - சிறுத்தை சிவாவின் புதிய படத்தில் இசையமைப்பாளராக இசையமைக்க கமிட்டாகி இருக்கிறார்.

பிரபல சூர்யா பட இசையமைப்பாளரை ரகசிய திருமணம் செய்த நடிகை?.. கோபத்தில் நடிகை வெளியிட்ட பதில்.. | Dsp Secretly Married To Telugu Actress Pujita

இசையில் பிஸியாக இருப்பதால் 41 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கு நடிகை பூஜிதா பொண்ணாடா என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரபல சூர்யா பட இசையமைப்பாளரை ரகசிய திருமணம் செய்த நடிகை?.. கோபத்தில் நடிகை வெளியிட்ட பதில்.. | Dsp Secretly Married To Telugu Actress Pujita

இதுகுறித்து டோலிவுட் சினிமாவில் பரவிய நிலையில், பூஜிதா ஷாக்காகி விளக்கமளித்துள்ளார்.

இந்த செய்தி துளிக்கூட உண்மையில்லை என்றும் எங்கிருந்து தான் இப்படியான ஆதரமற்ற தகவல்கள் எல்லாம் பரவுகிறது என எனக்கு தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

நான் அவருடன் டேட்டிங் கூட செய்யவில்லை. தற்போது வரை நான் சிங்களாகவே தான் இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.