Dude படம் இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
Pradeep Ranganathan
Mamitha Baiju
Dude
By Karthick Raja
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த Dude திரைப்படம் சில சர்ச்சையில் சிக்கினாலும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் இப்படம் பட்டையை கிளப்பி வருகிறது. முதல் நாளில் இருந்தே வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வரும் Dude, இதுவரை ஏழு நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.

இந்த நிலையில், இப்படம் உலகளவில் 7 நாட்களை நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 7 நாட்களில் உலகளவில் ரூ. 98+ கோடி வசூல் செய்துள்ளது.
இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்தின் இறுதி வசூல் எவ்வளவு வரும் என்று.