விஜய் டிவி சீரியலை பந்தாடிய சன் டிவி சீரியல்!! டாப் 10 டிஆர்பி லிஸ்ட்..
டாப் 10 சீரியல்கள்
சின்னத்திரை சீரியல்கள் மீதான வரவேற்பு நாளுக்கு நாள் எகிறிய வண்ணம் தான் இருக்கிறது. அதிலும் சன் டிவிக்கு நிகராக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளும் போட்டிபோட்டு சீரியல்களை அறிமுகப்படுத்தி ஒளிப்பரப்பு செய்து வருகிறார்கள்.

அப்படி வாரம் வாரம் எந்த சீரியல் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடிக்கிறது என்ற பட்டியல் வெளியாகும். அந்தவகையில் 2026 ஆண்டின் 10வது வாரத்திற்கான டாப் 10 சீரியல்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதை பார்ப்போம்..

டாப் 10 சீரியல்கள் பட்டியலில் 10வது வாரத்தில் முதலிடத்தில் 9.68 புள்ளிகள் பெற்று மூன்று முடிச்சு சீரியல் பிடித்துள்ளது. 2வது இடத்தில் 8.27 புள்ளிகளுடன் சிங்கப்பெண்ணே சீரியலும், மருமகள் சீரியல் 7.73 புள்ளிகள் பெற்று 3வது இடத்தினை பிடித்து, முதல் மூன்று இடங்களில் சன் தொலைக்காட்சி பிடித்து முன்னிலை பெற்றுள்ளது.

7.60 புள்ளிகளுடன் கயல் சீரியல் 4வது இடத்திலும், அய்யனார் துணை சீரியல் 7.41 புள்ளிகள் பெற்று 5வது இடத்திலும் உள்ளது.
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் 6.98 டிஆர்பி புள்ளிகளுடன் 6வது இடத்திலும், சன் டிவியின் அன்னம் சீரியல் 6.86 புள்ளிகளுடன் 7வது இடத்திலும் உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 6.70 புள்ளிகளுடன் 8வது இடத்திலும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் 6.13 புள்ளிகளுடன் 9வது இடத்திலும், ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியல் 5.50 புள்ளிகளுடன் 10வது இடத்திலும் இருக்கிறது.