இன்னுமா உங்களுக்கு பணம் ஆசை தீரல? திருமணத்திற்கு பிறகும் கல்லா கட்டும் நயன் தாரா..
லேடி சூப்பர் ஸ்டார் என்று தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வரும் நடிகைகளில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் நடிகை நயன் தாரா. பல ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில் வரும் ஜூன் 9 ஆம் தேதி திருமண செய்யவுள்ளார்.
இதற்காக மகாபலிபுரம் ரெசாட்டில் திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. இதனிடையே நடிகை நயன்தாரா தன்னுடைய திருமண வீடியோவை பிரபல ஓடிடி தளத்திற்கு விற்க விலை பேசியுள்ளார். இந்த நிலையில் ஏற்கனவே திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரிவித்திருந்து அது கேன்சல் ஆனது.
இந்த நிலையில் நயன்தாரா ஓடிடி தளத்தில் தன் திருமண வீடியோவை விலை பேசுவதற்காகவே மகாபலிபுரத்தில் தன் திருமணத்தை மாற்றியிருக்கிறார்கள்.
தனது திருமணத்தில் கூட வியாபாரம் செய்யும் அளவிற்கு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இறங்கியுள்ளனர் என்று கோலிவுட் வட்டாரத்தில் முகம் சுளிக்கும் வகையில் பேசி வருகிறார்கள்.
நயன்தாரா திருமணத்திற்குப்பின் படவாய்ப்புகள் அதிகமாக வராமல் போக அதிக வாய்ப்புகள் இருப்பதால் திருமணத்தை வைத்து கல்லா கட்ட பார்த்து வருகிறாராம் நயன் தாரா.