சைத்ராவுக்கு எதிரான ஆபாச பதிவு!! நடவடிக்கை எடுத்த போலிசார்..

Bengaluru Tamil Actress Actress
By Jai May 16, 2026 12:30 PM GMT
Report

சைத்ரா ஜே அச்சார்

மஹிரா, ஆ த்ருஷ்யா, கில்கி, தோபி, பிளிங்க் போன்ற கன்னட மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சைத்ரா ஜே அச்சார். கடந்த ஆண்டு வெளியான 3BHK என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பலரது கவனத்தையும் ஈர்த்தார் சைத்ரா.

இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான மை லார்ட் படத்தில் சுசிலா என்ற ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறார்.

சைத்ராவுக்கு எதிரான ஆபாச பதிவு!! நடவடிக்கை எடுத்த போலிசார்.. | Efamation Against Chaitra Achar Instagram User

நடிப்பை தாண்டி பாடகியாகவும் விளங்கி வரும் சைத்ரா, பல பாடல்களை பாடியிருக்கிறார். மீசையமுறுக்கு படத்தின் பப்பாளி பழமே என்ற பாடலுக்கு ஹிப் ஆப் ஆதியுடன் ஆட்டம் போட்டது தற்போது வரை ரசிகர்களின் ரீல்ஸ் நடனமாக இருந்து வருகிறது.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சைத்ராவின் இன்ஸ்டாகிராமில் மகேஷ் ஒசமணி என்பவர் ஆபாச கருத்துக்களை பதிவிட்டு வந்தார். மகேஷ் என்பவர் இன்ஸ்டாகிராமில் போலிஸ் சீருடை அணிந்த புகைப்படத்தை முகப்பில் வைத்திருந்ததை அடுத்து பெங்களூரு போலீஸ் இன்ஸ்டாகிராமில் டேக் செய்துள்ளார்.

சைத்ராவுக்கு எதிரான ஆபாச பதிவு!! நடவடிக்கை எடுத்த போலிசார்.. | Efamation Against Chaitra Achar Instagram User

பதறிய நபர் இன்ஸ்டாகிராமில் தான் வெளியிட்ட பதிவுகளை அழித்ததோடு, சைத்ராவிடம் மன்னுப்பு கேட்டுள்ளார்.