என் சாவுக்கு அவர் தான் காரணம்!! தற்கொலை முயற்சி செய்த நடிகை இலக்கியா குற்றச்சாட்டு...

Gossip Today Indian Actress Tamil Actress Actress
By Edward Jul 25, 2025 02:30 PM GMT
Report

இலக்கியா

டிக்டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் தான் இலக்கியா. ஒருசில படங்களில் நடித்து இலக்கியா, கிளாமர் பொட்டோஷூட் எடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார். சில நாட்களுக்கு முன் அதிகமான ஊட்டச்சத்து மாத்திரைகளை போட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

என் சாவுக்கு அவர் தான் காரணம்!! தற்கொலை முயற்சி செய்த நடிகை இலக்கியா குற்றச்சாட்டு... | Elakkiya Attempts Suicide Blames Stunt Director

இதுகுறித்து போலிசார் விசாரணித்து வரும் நிலையில், சூப்பர் சுப்பராயன் மகன் திலீப் சுப்பராயன் மீது பகீர் குற்றச்சாட்டை இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் பதிவிட்டுள்ளார். அதில், என்னோட சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மட்டும் தான் காரணம். என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டான்.

6 ஆண்டுகளாக அவன் கூட நான் இருந்திருக்கிறேன், நிறைய அடிக்கிறான், நானும் பொறுத்து பொறுத்து என்னால் முடியல. இதுவுமே நான் போட்டா என்னை அடிஅடின்னு அடிப்பான் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த போஸ்ட்டில் திலீப் சுப்பராயன் புகைப்படத்தையும் பதிவிட்டிருக்கிறார்.

என் சாவுக்கு அவர் தான் காரணம்!! தற்கொலை முயற்சி செய்த நடிகை இலக்கியா குற்றச்சாட்டு... | Elakkiya Attempts Suicide Blames Stunt Director

இலக்கியா, போரூர் தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, தற்போது மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாகம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தற்கொலைக்கு முயன்றபோது இலக்கியா மது போதையில் இருந்ததாகவும் போலிசார் விசாரணையில் சொல்லப்படுகிறது.

தற்போது இலக்கியாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், எல்லாம் போலி செய்திகள் என்று கூறி ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார் இலக்கியா.