ஸ்வீடன் நாட்டு நடிகையை மடக்கிய நடிகர் தனுஷ்! அண்ணன் கொடுத்த டிரீட்..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஆரம்பித்து சமீபத்தில் மாறன் படம் வரை பல போராட்டங்களை தாண்டி இந்த இடத்திற்கு வந்தார். ஆனால் தற்போது தேசிய விருது வாங்கியும் ஹாலிவுட் நடிகர் என்ற பெருமையும் பெற்று வருகிறார்.
காதலித்து திருமணம் செய்து கொண்ட தனுஷி ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை 18 வருடங்களுக்கு பின் பிரிந்துள்ளார். இரு ஆண் பிள்ளைகள் இருக்கும் நிலையில் இப்படியொரு முடிவுக்கு என்ன காரணம் என்று அனைவரும் கேள்வி கேட்டும் வருகிறார்கள்.
தற்போது இருவரும் படங்களில் கவனம் செலுத்தி வருவதால் பிள்ளைகளை கிடைக்கும் நேரத்தில் சந்தித்து அவர்களுடன் நேரத்தினை செலவிட்டும் வருகிறார்கள். இந்நிலையில் தனுஷ், மாறன் படத்திற்கு பிறகு திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
தன்னுடைய அண்ணன் இயக்கும் நானே வருவேன் படத்தின் இறுதி கட்டப்படப்பிடிப்பு நடைபெற்று வருவதால் அப்படத்தில் ஒன்னொரு கதாநாயகியை இறக்கியுள்ளார்கள். ஸ்வீடன் நாட்டினை சேர்ந்த மாடலும் நடிகையுமான எல்லி அவர்ரம் என்பவரை கமிட் செய்துள்ளனர்.
இந்த நடிகை வெளிநாட்டு நடிகையாக இருந்தாலும் இந்திய படங்களிலும் நடித்திருக்கிறார். நடிகை காஜல் அகர்வால் நடித்த பாரிஷ் பாரிஷ் படத்தில் நடித்துள்ளாராம். தற்போது அவரின் காட்சிகள் கூடிய சீக்கிரம் ஆரம்பிக்கவுள்ளதாம்.