ஆத்தி 83 பில்லியன் வரியா! உலகையே அதிரவைத்த எலான் மஸ்க்..

Tesla elon-musk amerian TeslaCEO
By Edward Dec 20, 2021 10:45 PM GMT
Report

தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் வாதிகள் தன்னுடைய கடமையை மறந்து மக்கள் பணத்தினை சுரண்டி சீக்ரெட் கஜானாவில் மறைத்து சேர்த்து வைப்பார்கள். அதிலும் வரியை சரியான முறையில் கட்டாமல் ஏமாற்றுவது தான் கொடுமை.

ஆனால் அமெரிக்க மக்களின் நலனுக்காக மிகப்பெரியளவில் வருவாயாக இருக்கும் என்ற நோக்கத்தோடு உலகில் அதிக வருவாயை ஈட்டும் எலான் மஸ்க் செய்துள்ளது செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சியின் செனட்டர் எலிசபெத் வாரன், எலான் மஸ்க்கை காட்டமாக பேசியிருந்தார். எலான் மஸ்க் வரிச்சலுகை பெறுவதை நிறுத்திவிட்டு அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வண்ணம் எலான் மஸ்க் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பாருங்கள் என்னுடைய 2021ஆம் ஆண்டின் வரியாக இவ்வளவு செலுத்த இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

அதில் அமெரிக்க டாலர் படி 11 பில்லியன் டாலரை வரியாக கட்டவுள்ளார் என்பதுதான். இது இந்திய மதிப்பில் 83,000 கோடி ரூபாயாம். எலான் மஸ்க்கின் மொத்த சொத்து மதிப்பு 27 ஆயிரம் கோடி டாலர் என்கிறார்கள்.