ஒரு நிமிஷத்துக்கு கோடியா? லால் சலாம்-க்கு ரஜினிகாந் வாங்கிய மொத்த சம்பளம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் இன்று பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகியுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
பல ஆண்டுகள் கழித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கவனம் செலுத்தி லால் சலாம் படத்தினை ரிலீஸ் செய்திருக்கிறார். கிரிக்கெட் சம்மந்தமான கதைக்களத்துடன் இன்று வெளியாகியிருக்கும் லால் சலாம் படத்தின் முதல் காட்சியை பார்த்துவிட்டு, ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் லால் சலாம் படத்தில் மொத்தம் ரஜினிகாந்தின் காட்சிகள் 40 நிமிடத்திற்கு வருகிறது. அப்படி என்றால் லால் சலாம் படத்திற்கான சம்பளம் ஒரு நிமிடத்திற்கு 1 கோடி கொடுக்கப்பட்டு 40 நிமிடத்திற்கு 40 கோடி சம்பளமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாங்கியுள்ளாராம்.