படவாய்ப்பில்லாமல் சீரியலில் குதித்த நடிகர் மாரிமுத்து!! குணசேகரன் ரோலுக்காக இத்தனை லட்சம் சம்பளமா..
தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக பல முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றி சினிமாத்துறையில் பல வேலைகளை செய்து வந்தவர் நடிகர் மாரிமுத்து.
அஜித்தின் நெருங்கிய நண்பராக விளங்கி பல படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றிய மாரிமுத்து, தற்போது படங்களில் நடித்தும் வருகிறார்.
மேலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
புதுவிதமான வில்லன் ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று அனைவரையும் கவர்ந்தும் வருகிறார்.
இந்நிலையில் நடிகர் மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் ரோலில் நடிக்க ஒரு மாத்திற்கு 75 லட்சம் சம்பளமாக பெறுகிறாராம்.
டாப் நடிகைகளுக்கு கூட சீரியலில் இப்படியொரு சம்பளத்தை பெறாத நிலையில் குணசேகரன் கதாபாத்திரத்திற்காக மாரிமுத்து இத்தனை லட்சத்தில் சம்பளம் வாங்கி வருகிறார்.
அந்த கதாபாத்திரம் தான் சீரியலை இந்த அளவிற்கு பிரபலப்படுத்தி இருப்பதாகவும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.