பாலியல் புகாரளித்த நடிகை மீது திடீரென புகாரளித்த முன்னாள் அமைச்சரின் மனைவி! இதுதான் காரணம்!
கொரோனா வைரஸை தாண்டி தமிழ் நாட்டில் பல சம்பவங்கள் பெரிதாக பேசப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில் அரசியலில் பெரிய அதிர்ச்சையை ஏற்படுத்திய விஷயம் நடிகை சாந்தினியிடன் 5 ஆண்டுகள் பழகி குடும்பம் நடத்திய முன்னாள் அமைச்சர் பற்றிதான்.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 5 ஆண்டுகள் குடும்பம் நடத்தி 3 முறை வற்புறுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்தார் என்றும் அதற்கான ஆடியோ மற்றும் வீடியோ, புகைப்படங்கள் ஆதாரங்களை கொண்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திடம் சென்று புகாரளித்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டிற்கு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தரப்பில் தொலைப்பேசி மூலம் விளக்கமளித்தார். அதில் நடிகை சாந்தினி யார் என்றே எனக்கு தெரியாது. தன் பெயரை கெடுக்கவும், பணம் பறிக்கும் நோக்கில் இப்படி புகாரளித்துள்ளார் என்றும் கூறியுள்ளார். மேலும் 3 கோடி ரூபாய் பணம் கேட்டு பலர் என்னிடம் மிரட்டல் விடுப்பதாகவும் பகிரங்கமாக பதிலளித்துள்ளார்.
ஆனால் இது குறித்து கொலை மிரட்டல் திருமணம் செய்வதாக ஏமாற்றுதல் உள்ளிட்ட 6 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது. மேலும் மணிகண்டன் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதைதொடர்ந்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி வசந்தி ராமநாதபுரம் காவல்துறை கண்காணிபாளர் கார்த்திக்கை சந்தித்துள்ளார்.
மருத்துவராக இருக்கும் வசந்தி, போலிசாரிடம், எனது குடும்ப வாழ்க்கையை சிதைக்கும் நோக்கத்தோடும், எங்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் நோக்கத்தோடும், துணை நடிகை சாந்தினி தனது கணவர் மீது பொய்யான புகார் கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
தன் கணவர் மீது சாந்தினி அவதூறு பரப்பி, என் மன உளைச்சலுக்கு காரணமாக செயல்படுகிறார் என்றும், சாந்தினி மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் புகாரளித்துள்ளார். இது தொடர்பாக விசாரிக்கும் படி காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்துள்ளாராம்.