ரஜினி படத்தையே வேண்டாம் என நிராகரித்தாரா மலையாள நடிகர்.. யார் தெரியுமா
Rajinikanth
Fahadh Faasil
By Kathick
சூப்பர்ஸ்டார் என உலகளவில் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ரஜினிகாந்த். இவருடைய படத்தில் நடிப்பது என்பது பல நடிகர், நடிகைகளுக்கு பெரும் கவனாக இருக்கும்.
ஆனால், தற்போது ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் வேண்டாம் என பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் கூறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
கூலி படத்தில் ரஜினியுடன் நடிக்க பகத் பாசிலிடம் கேட்டுள்ளனர். ஆனால், பகத் பாசில் இந்த வாய்ப்பை நிராகரித்து விட்டார் என சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை.
கூலி படத்தில் பகத் பாசில் நடிக்க நிராகரிப்பு தெரிவித்த நிலையில், வேட்டையன் படத்தில் ரஜினியுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.