பெட்ரூம்மில் சைக்கோ போல் மாறிய ஃபஹத் பாசில்.. பயத்தில் மிரண்டு போன நஸ்ரியா!
வில்லன், ஹீரோ, காமெடி என அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்ளை கவர்ந்து வருபவர் தான் ஃபஹத் பாசில். இவர் சூப்பர் டீலக்ஸ், விக்ரம், வேலைக்காரன் போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது மாரி செல்வராஜ் உதயநிதி கூட்டணியில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 29 -ம் தேதி வெளியாக இருக்கிறது.
ஃபஹத் பாசில் ஒருமுறை பாத் ரூமில் பயங்கரமாக கத்தினாராம். பின்னர் பெட் ரூம் வந்த பிறகும் மோசமாக கத்தியுள்ளார்.
அப்போது நஸ்ரியா என்ன ஆச்சு என்று விசாரித்த போது தான் தெரிகிறது ஃபஹத் பாசில் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறாரோ அது போல மாறிவிடுவாராம்.
இதையடுத்து நஸ்ரியா ஃபஹத் பாசில் இடம், " நீங்கள் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் வீட்டிற்கு வந்த பிறகு அதையெல்லாம் மறந்துவிட வேண்டும். இல்லையென்றால் மனநிலை மருத்துவரிடம் கொண்டுபோய்விட்டுவிடுவேன். மேலும் மீடியாவிடம் நீங்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று சொல்லிவிடுவேன்" என்று நஸ்ரியா கூறியுள்ளார்.
அதில் இருந்து ஃபஹத் பாசில் இது போன்று செய்வதை நிறுத்திவிட்டதாக பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்