ஆள விடுங்கடா சாமி!! மாமன்னன் படத்தால் தலைத்தெறித்து ஓடி அதை செய்த நடிகர் பகத் பாசில்
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்ட பல நடித்து வெளியான படம் மாமன்னன். படம் வெளியாக கலவையான விமர்சனத்தை பெற்று வந்தது.
ஆனால் படம் தியேட்டரில் வெளியாகி கொண்டாடப்பட்டதைவிட தற்போட்து ஓடிடி-யில் வெளியான பிறகு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் டிரெண்டாக்கியுள்ளனர். அதிலும் ரத்னவேலு என்ற வில்லன் ரோலில் நடித்த பகத் பாசிலின் கேரக்டரை தான் கொண்டாடியுள்ளனர்.
படத்தில் ரத்னவேலு காட்சிகளை வைத்து ஹீரோவை போல் கட் செய்து இணையத்தில் வீடியோக்களை டிரெண்ட்டாக்கி வருகிறார்கள் நெட்டிசன்கள்.
Moral of #Maamannan : Never cast FaFa if You Want people to Hate the Character. #FahadhFaasil ❤🔥❤🔥 pic.twitter.com/kOJlyDDUug
— Mani_strong12 (@mani_strong12) July 29, 2023
இதனால் பகத் பாசில் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இருக்கும் கவர் புகைப்படத்தை மாமன்னன் படத்தின் லுக்கை வைத்திருந்தார்.
அதையும் நெட்டிசன்கள் இணையத்தில் கொண்டாடி வரும் நிலையில் பகத் பாசி கவர் புகைப்படத்தை நீக்கிவிட்டுள்ளார்.
ஆள விடுங்கடா சாமி என்று கூறுவது போல் பகத் பாசில் இதை செய்திருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
20 மணி நேரம் கூட cover pic
— black cat (@Cat__offi) August 1, 2023
வைக்க விட மாட்றீங்களே டா#FahadhFaasil .. pic.twitter.com/fePsnvlrAb