2 வது முறை காதலில் விழுந்த 43 வயது நடிகர்.. பிரேக் ஆகாமல் கல்யாணத்தில் முடியுமா?

Gossip Today
By Edward Sep 12, 2022 10:51 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 5 நடிகர்கள் நடித்த பிரம்மாண்ட இயக்குனர் படத்தின் மூலம் பிரபலமானவர் தான் அந்த நடிகர். இப்படம் நல்ல வரவேற்பு பெற்றப்பின் ஜாக்லெட் பாயாகவும் சுற்றி வந்தார். முன்னணி நடிகையுடன் இந்தியளவில் பிரபலமான இயக்குனர் படத்தில் திருமணமாகாத நடிகைக்கு ஜோடியாக நடித்தார்.

2 வது முறை காதலில் விழுந்த 43 வயது நடிகர்.. பிரேக் ஆகாமல் கல்யாணத்தில் முடியுமா? | Famous Actor Who Fell In Love For The Second Time

முதல் காதல் தோல்வி

அவரின் ஆரம்பகாலக்கட்ட சினிமாவில் முன்னணி இடத்தினை பிடிக்கவுள்ள ஒரு நடிகையுடன் காதலில் இருந்து வந்தார். இருவரும் மாறிமாறி வெளிப்படையாக காதலில் வழிந்து வந்த நிலையில் சில காரணங்களால் நடிகை அந்த நடிகரிடம் இருந்து தப்பி அக்கடத்தேசத்து நடிகரை திருமணம் செய்து கொண்டார்.

இதன்பின் படங்களில் நடித்து வந்த நடிகருக்கு சமீபகாலமாக தமிழில் வாய்ப்பு கிடைக்காமல் போனது. இதனால் பாலிவுட் சினிமாவை நம்பி அங்கேயே செட்டிலாகிவிட்டார். சமுகவலைத்தளத்தில் சர்ச்சையிலும் சிக்கி வந்த அவர் தமிழில் ஒருசில படங்களில் நடித்துள்ள ஒரு நடிகையும் டேட்டிங்கில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியது.

2 வது முறை காதலில் விழுந்த 43 வயது நடிகர்.. பிரேக் ஆகாமல் கல்யாணத்தில் முடியுமா? | Famous Actor Who Fell In Love For The Second Time

ஜோடியா சுற்றும் நடிகர்

இருவரும் ஜோடியாக சென்றதை பத்திரிக்கையாளர் வீடியோ எடுப்பதை கண்டித்த வீடியோ கூட வைரலானது. அப்படி இருக்கையில் சமீபத்தில் நடித்த 500 கோடி பட்ஜெட் படத்தின் ஆடியோ விழாவிற்கு அந்த நடிகையுடன் ஜோடியாக பக்கத்து பக்கத்து சீட்டில் அமர்ந்து ரொமான்ஸ் செய்துள்ளார் நடிகர். இந்த காதலும் திருமணத்திலாவது முடியட்டுமே என்று பலர் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.