ரம்பாவுக்கே டஃப் கொடுத்த விஜய் பட நடிகை!! ஒரே படத்தில் உச்சம் தொட்டு காணாமல் போன நடிகைகள்..

Vijay Gossip Today Indian Actress Tamil Actress Actress
By Edward Jun 29, 2023 04:00 PM GMT
Report

சினிமாவை பொறுத்தவரை படங்களில் நடிக்கும் நடிகைகள் டாப் இடத்தினை பிடிக்க கஷ்டப்பட்டு பல வெற்றிகளை கொடுக்கவேண்டும். ஆனால் தன்னுடைய திறமையால் நடித்த முதல் படமே ஹிட் கொடுக்கும் அளவிற்கு சிலருக்கு அதிஷ்டம் வரும். அப்படி நடித்த ஒரே படத்தில் உச்சம் தொட்டு அப்படியே காணாமல் போன நடிகைகளும் இருக்கிறார்கள். அந்தவகையில் இருப்பவர்களில் சில நடிகைகளின் லிஸ்ட் பார்ப்போம்.

பிரியங்கா கோத்தாரி

நடிகர் மாதவன் நடித்த ஜே ஜே என்ற படத்தின் மூலம் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் நடிகை பிரியங்கா கோத்தாரி. இப்படத்தினை தொடர்ந்து கச்சேரி படத்தில் குத்தாட்டம் ஆட்டம் போட்டு அதன்பின் ஆள் அடையாளம் தெரியாமல் காணமல் போனார்.

ரோஷினி

கமல் ஹாசன் நடிப்பில் வெளியான குணா படத்தில் அபிராமி ரோலில் நடித்தவர் நடிகை ரோஷினி. இப்படத்தை அடுத்து அவர் எந்த படத்திலும் நடிக்காமல் காணாமல் போனார்.

பிரியா கில்

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான் ரெட் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் நடிகை பிரியா கில். ஒல்லிக்குச்சி உடம்புகாரி என்ற பெயரை எடுத்த அவர் அதன்பின் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

மோனிகா

மின்சார கண்ணா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார் நடிகை மோனிகா. இப்படத்தில் சிறப்பாக நடித்த மோனிகா அதன்பின் தமிழ் பக்கமே திரும்பி பார்க்காமல் இந்தி பக்கம் சென்றுவிட்டார். தற்போது தொலைக்காட்சி நடிகையாக நடித்தும் வருகிறார்.

ரியா சென்

தாஜ்மஹால் படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்து பிரபலமான நடிகை ரியா சென், இதன்பின் ஒருசில படங்களில் நடித்தும் வரவேற்பு பெறாமல் அப்படியே இந்தி பக்கம் சென்றுவிட்டார். தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.