அம்மா இருக்கும் போதே அதிதி சங்கருக்கு பிரபோஸ் செய்த நபர்!! போட்டுக்கொடுத்த சிவகார்த்திகேயன்..
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் மகளாக விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை அதிதி சங்கர். டாக்டர் படிப்பை முடித்து நடிப்பின் மீது ஆர்வத்தால் விருமன் படத்தில் அறிமுகமாகி வெற்றியையும் கண்டார் அதிதி.
அதன்பின் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திலும் நடித்து அனைவரையும் ஈர்த்தார். இதனைதொடர்ந்து பல படங்களில் கமிட்டாகிய அதிதி சங்கருக்கு விரைவில் இயக்குனர் சங்கர் திருமணம் செய்து வைப்பதாக முடிவெடுத்துள்ளார் என்று இணையத்தில் செய்தி வெளியானது.
அதெல்லாம் பொய் என்று கூறும் வகையில், யார் அந்த மாப்பிள்ளை என்று காமெடியாக ரீப்ளே செய்து முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில் மாவீரன் படத்தின் ஆடியோ லான்ச்சின் போது காமெடி நடிகர் ஒருவர் அதிதி சங்கருக்கு ரோஜா பூ கொடுத்து பிரபோஸ் செய்திருக்கிறார். உடனே சிவகார்த்திகேயன், தம்பி பக்கத்துல அதிதி மம்மி இருக்காங்கன்னும் போட்டுக்கொடுத்துள்ளார்.
உடனே அந்த காமெடி நடிகர் சாரி ஆண்டி, அத்தை-ஜீ என்று காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாக நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகிறார்கள்.