கன்னத்தை கிள்ளி கொஞ்சிய ரசிகர்கள்!! கோபம் வராததற்கான காரணத்தை சொன்ன ரச்சிதா ராம்..

Viral Video Tamil Actress Actress
By Jai Oct 05, 2026 02:30 AM GMT
Report

ரச்சிதா ராம்

கன்னட தொலைக்காட்சி மற்றும் சீரியல்களில் நடித்து பின் கன்னட படங்களில் நடித்து டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை ரச்சிதா ராம். முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான ரச்சிதா, 2025ல் வெளியான கூலி படத்த்ல் கல்யாணி திலீப் ரோலில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். எப்போது ரசிகர்களுடன் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதை வழக்கமாக வைத்து வருகிறார் ரச்சிதா.

கன்னத்தை கிள்ளி கொஞ்சிய ரசிகர்கள்!! கோபம் வராததற்கான காரணத்தை சொன்ன ரச்சிதா ராம்.. | Fan Pinching My Cheek Was Expression Rachita Ram

தன்னுடைய 34வது பிறந்தநாளை முன்னிட்டு, கர்நாடகாவில் ரசிகர்களின் பிரமாண்ட கட்-அவுட் வைத்து கொண்டாடிய இடத்திற்கு சமீபத்தில் சென்றுள்ளார். அங்கு ரசிகர்கள் ஒருசிலர் அவரது கன்னத்தை கிள்ளியபடி சென்ற வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வந்தது.

கன்னத்தை கிள்ளி 

இதுகுறித்து பேசிய ரச்சிதா ராம், என் ரசிகர்கள் என்மீது வைத்திருந்த அன்பை தவறான நோக்கத்தில் வெளிப்படுத்தவில்லை, இதைபார்த்த என் நண்பர்கள், உனக்கு கோபம் வரவில்லையா? என்று கேட்டார்கள். ஒருவர் குழந்தையை கொஞ்சி அன்புடன் அரவணைப்பது போன்றதுதா என் ரசிகரின் அன்பும்.

கன்னத்தை கிள்ளி கொஞ்சிய ரசிகர்கள்!! கோபம் வராததற்கான காரணத்தை சொன்ன ரச்சிதா ராம்.. | Fan Pinching My Cheek Was Expression Rachita Ram

அதில் எந்தவிதமான தவறான நோக்கமும் இல்லை, ஒருவேளை அதுதவறான தொடுதலாக இருந்திருந்தால், நிச்சயமாக நான் கண்டித்து இருப்பேன், ஆனால் ஒருவர் தூய்மையான அன்பை வெளிப்படுத்தும்போது அதை நான் எப்படி கண்டிக்க முடியும்? நான் அதை ஒரு பாராட்டுதலாக எடுத்துக் கொண்டேன். உண்மையில், அந்த அன்பை நான் மிகவும் ரசித்தேன் என்று கூறியிருக்கிறார்.