சாண்ட்ராவை காரை விட்டு தள்ளிவிட்ட பாரு, கம்ருதீன்.. ரெட் கார்டு கொடுக்க வேண்டும்? கடும் கோபத்தில் நெட்டிசன்கள்
பிக் பாஸ் 9 கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த டிக்கெட் டூ பினாலே டாக்ஸ் இந்த வாரம் நடைபெற்று வருகிறது.
இதில் நடந்த கார் டாஸ்க் தான் பரபரப்பாக பேசப்படும் ஒன்றாக மாறி இருக்கிறது. பாரு மற்றும் கம்ருதின் இருவரும் இணைந்து மிகவும் மோசமாக சாண்ட்ரா பற்றி பேசியது, அதை தொடர்ந்து இருவரும் சேர்ந்து சாண்ட்ராவை காரை விட்டு கடுமையான முறையில் வெளியில் தள்ளியது என மோசமான செயலில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

காரை விட்டு கீழே விழுந்த சாண்ட்ரா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். மேலும் அவர் தற்போது நலமாக இருப்பதாக பிக் பாஸ் தெரிவித்தார். இப்படியொரு சம்பவம் நடந்த நிலையில், வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் கம்ருதீன் மற்றும் பாருவுடன் கோபமாக சண்டை போட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பிக் பாஸ் வரலாற்றில் மிக மோசமான போட்டியாளர்கள் பார்வதி மற்றும் கம்ருதீன் என நெட்டிசன்கள் தற்போது கோபமாக X தளத்தில் திட்டி தீர்த்து வருகின்றனர். பாரு, கம்ருதின் இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்க வேண்டும் எனவும் எல்லோரும் கேட்டு வருகின்றனர்.
