சுக்குநூறான ஆடி கார்.. சிம்புவுக்காக ஃப்ரீயா பப்ளிசிட்டி பண்ண கூல் சுரேஷ் ஏற்பட்ட விபரீதம்..

Silambarasan Gossip Today Vendhu Thanindhathu Kaadu
By Edward Sep 15, 2022 09:10 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு. மாநாடு படத்தின் 100 வசூல் வெற்றிக்கு பிறகு இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் வெந்து தணிந்தது காடு படம் இன்று முதல் வெளியாகியுள்ளது.

ப்ரீ பிரமோஷன்

சிம்புவின் சிறப்பான நடிப்பி ஏ ஆர் ரகுமானின் இசை, ஜிவிஎம்-ன் இயக்கம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ரசிகர்கள் சிம்புவை கொண்டாடி வரும் நிலையில் படம் ஆரம்பித்த நாளில் இருந்து அப்படத்தினை பிரமோஷன் செய்யும் வேலையில் நடிகர் கூல் சுரேஷ் செயல்பட்டு வந்தார்.

எங்கு சென்றாலும் வெந்து தணிந்தது காடு, சிம்புவுக்கு வணக்கத்த போடு என்ற வசனம் மிகப்பெரியளவில் வைரலாகியது. இதற்கு நடிகர் சிம்பு கூட கூல் சுரேஷிற்கு நன்றி தெரிவித்திருந்தார்.

சுக்குநூறான ஆடி கார்.. சிம்புவுக்காக ஃப்ரீயா பப்ளிசிட்டி பண்ண கூல் சுரேஷ் ஏற்பட்ட விபரீதம்.. | Fans Break Cook Suresh Car Simbu Movie Promotion

காரை உடைத்த ரசிகர்கள்

இந்நிலையில் இன்று காலை 4 மணி அளவில் படம் பார்க்க தியேட்டர் சென்றிருந்த கூல் சுரேஷ் காரில் சென்றிருக்கிறார்.

ரசிகர்கள் கூட்டம் அதிகமாகியதால் முண்டியடித்து உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார். அப்போது அவர் வந்த ஆடி கார் மீது ஏறிய ரசிகர்கள் முன் பக்க கண்ணாடியை உடைத்துள்ளனர்.

அந்த ஆடி கார் அவரது சொந்த காரில்லையாம். ஒரு யூடியூப் சேனலின் ஸ்பான்ஸர் மூலம் அங்கு வந்திருந்தாராம். இதனால் அவருக்கு 1 லட்சம் ரூபாய் அளவில் கிளைம் செய்துள்ளார்களாம்.