நயன்தாரா மீது மரியாதை போய்விட்டது!! கொந்தளித்த ரசிகர்கள்.. அப்படி என்ன ஆச்சு
நயன்தாரா
நடிகர் தனுஷ் குறித்து கடந்த வாரம் நயன்தாரா வெளியிட்ட அறிக்கை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
அதில், நானும் ரௌடி தான் படத்தின் காட்சிகள், பாடல்களை தனது திருமண ஆவண படத்தில் பயன்படுத்த அனுமதி NOC கேட்டு தனுஷை கடந்த இரண்டு வருடங்களாக அணுகியதாகவும், அதை அவர் தர மறுத்துவிட்டார் என்றும் நயன்தாரா குற்றம் சாட்டி இருந்தார்.
அதை தொடர்ந்து தனுஷ் தனிப்பட்ட விரோதம் காரணமாக இவ்வாறு செய்கிறார் என பல்வேறு குற்றச்சாட்டுகளை நயன்தாரா கூறி இருந்தார்.
அதே நேரத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வீடியோவும் நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியாகி இருந்தது. தற்போது, இந்த ஆவணப்படத்தை பார்த்து ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
கொந்தளித்த ரசிகர்கள்
அதற்கு முக்கிய காரணம் நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில் தனுஷ் வெறும் 3 நொடி காட்சிக்கு ரூ. 10 கோடி கேட்டதாக நயன்தாரா குற்றம் சாட்டினார்.
ஆனால், அந்த ஆவணப்படத்தில் சுமார் 37 நொடி காட்சி இருப்பதை கண்டு ரசிகர்கள் ஷாக் அடைந்துள்ளனர். 3 நொடி காட்சிக்கு ரூ. 10 கோடி கேட்டதாக நயன்தாரா கதறுகிறார்.
ஆனால், ஆவணப்படத்தில் தனுஷ் அனுமதி இல்லாமல் 37 நொடி BTS காட்சிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம், இதனால் நயன்தாரா மீது இருந்த மரியாதை போய்விட்டது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.