உயிரோடு இருக்கும் போதே கண்ணீர் அஞ்சலியா! போஸ்டரை பார்த்து பதிலடி கொடுத்த விந்தியா..

admk vindhiya sangamam
By Edward Apr 28, 2021 09:43 AM GMT
Report

சினிமாத்துறையை சார்ந்த சிலர் தற்போது அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் நடிகைகளுக்கு கட்சிகள் பெரிய பொறுப்புகளை கொடுத்து தொண்டர்களை ஈர்த்து வருகிறார்கள். அந்தவகையில் நடிகர் ரகுமானின் சங்கமம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை விந்தியா.

இதையடுத்து சில படங்களில் நடித்து வந்த விந்தியா அதிமுக கட்சியில் முக்கிய பங்கு வகுத்து வருகிறார். சமீபத்தில் அதிமுக பிரச்சாரத்தில் இடைவிடாத பேச்சால் பெரும் ரசிகர்களை குவித்தார். இந்நிலையில் தான் இறப்பதாக நினைத்து சில கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை மர்ம நபர்கள் பகிர்ந்து ஒட்டியுள்ளனர்.

இதை பார்த்து இணையத்தில் அவர் கூறியது, உலகத்துலயே தன்னோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர பாத்து தானே சிரிக்குற பாக்கியம் கிடைச்சவங்கள்ல நானும் ஒருத்தி. ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரேனு போஸ்டர் போட்டு அலுத்து போயிட்டாங்க போல.

இந்தமாறி போஸ்டர் பார்த்தா ஆயுசு கூடுமாம். ஆண்டவனை தவிர எனக்கு என்ட் கார்டு போட எவனாலயும் முடியாது ராசா’ பதிலடி கொடுத்துள்ளார்.