இந்தி பிக்பாஸ் 18ல் கலக்கிக் கொண்டு இருக்கும் ஸ்ருத்திகா! அவரின் கணவர் யார் தெரியுமா..

Bigg Boss Shrutika Salman Khan Bigg Boss Tamil 8
By Edward Oct 09, 2024 11:30 AM GMT
Edward

Edward

Report

இந்தி பிக்பாஸ் 18

விஜய் தொலைக்காட்சியில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 8 கடந்த ஞாயிற்று கிழமை ஆரம்பிக்கப்பட்டு முதல் நாளே சாச்சனா எவிக்ட்டாகி வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.

இந்தி பிக்பாஸ் 18ல் கலக்கிக் கொண்டு இருக்கும் ஸ்ருத்திகா! அவரின் கணவர் யார் தெரியுமா.. | Fans Like Hindi Biggboss18 For Shrutika Doing Fun

ஆரம்பத்திலேயே ஆண்கள் அணி, பெண்கள் அணி என்று பிரித்ததில் இருந்து சண்டை துவங்கியது. இது ஒரு பக்கம் இருந்தாலும் இணையத்தில் இந்தி பிக்பாஸ் 18ஐ ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

ஸ்ருத்திகா

அதற்கு காரணம் இந்தி பிக்பாஸ் 18 நிகழ்ச்சிக்கு தமிழ் பிரபலமான நடிகை ஸ்ருத்திகா சென்றிருப்பது தான். அவர் பேசுவது ஆரம்பத்தில் கிண்டல் செய்யப்பட்டாலும் தற்போது அவரை ரசிக்கவும் செய்துள்ளனர். நேற்று, சக போட்டியாளர்களிடம் பேசிய ஸ்ருத்திகா பிக்பாஸிடம் பல்ப் வாங்கியிருக்கிறார். அவர் பேசியதை சக போட்டியாளர்களும் பிக்பாஸும் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்தி பிக்பாஸ் 18ல் கலக்கிக் கொண்டு இருக்கும் ஸ்ருத்திகா! அவரின் கணவர் யார் தெரியுமா.. | Fans Like Hindi Biggboss18 For Shrutika Doing Fun

தற்போது இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு இந்தி ரசிகர்களையும் ரசிக்க வைத்து வருகிறது. மேலும் பிக்பாஸ் 18ல் தன் கணவர் அர்ஜுன் பற்றியும் பேசி பகிர்ந்துள்ளார். தற்போது ஸ்ருத்திகாவின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.