கூட்ட நெரிசலை பயன்படுத்தி அந்த இடத்தில் கைவைத்து அத்துமீறல்..ஆத்திரத்தில் ஆவேசமாக கத்திய தமன்னா

Tamannaah Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 25, 2023 07:31 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவை மட்டுமின்றி ஹிந்தி வெப் தொடர்களிலும் கலக்கி வருபவர் தான் நடிகை தமன்னா.

சமீபத்தில் இவர் நடிப்பில் ஜீ கர்டா என்ற வெப் தொடர் வெளியானது. அதில் தமன்னா படு மோசமான படுக்கையறை, லிப் லாக் காட்சிகளில் நடித்திருப்பார். இதற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடர் வெளியாகவுள்ளது. இதிலும் தமன்னா படு கவர்ச்சியாக நடித்திருக்கிறார்.

சமீபத்தில் தமன்னா கேரளத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இவரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் குவிந்தது.

இதையடுத்து நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்த ரசிகர்கள் தமன்னாவை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி தமன்னாவை தொடக்கூடாத இடத்தில் தொட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த தமன்னா ஆவேசமாக கத்தி அங்கு இருந்து கிளம்பினார்.