ராஷ்மிகாவிடம் தவறாக நடந்துகொண்ட ரசிகர்கள்.. அதிர்ச்சியடைந்த நடிகை

Rashmika Mandanna
By Kathick Sep 09, 2022 07:40 AM GMT
Report

நேஷனல் க்ரஷ் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி ஹிந்தியில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்கிறார். இப்படங்களின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

நேற்று மும்பையில் உள்ள ஒரு விநாயகர் கோவிலுக்கு தரிசனம் செய்ய நடிகை ராஸ்மிகா சென்றுள்ளார். அங்கு கூட்டத்திலிருந்த ரசிகர்கள் இவருடன் கைகொடுத்தும் செல்பி எடுக்கவும் முயன்றனர். அப்போது ரசிகர்களில் சிலர் ராஷ்மிகாவிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளனர். இதனால் ராஸ்மிகா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பவுன்சர்களை மீறி ரசிகர்கள் இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவும் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.