மகளை படுமோசமான வார்த்தையால் கேவளப்படுத்திய நெட்டிசன்கள்.. புலம்பும் பிக்பாஸ் அர்ச்சனா..

biggboss Controversy vj archana
By Edward May 14, 2021 07:32 AM GMT
Report
116 Shares

பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் விஜே அர்ச்சனா. தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அர்ச்சனா சில காரணங்களால் யூடியூப் சேனல் ஆரம்பித்து, விலகினார்.

இதையடுத்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் போது பலரை வேண்டுமென்றே பகைத்து கொண்டு தன்னுடைய சுயரூபத்தை வெளிக்காட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர் விமர்சனங்களைப் பெற்றார்.

அன்பு ஜெயிக்கும் என்று நம்புறியா? என்ற வசனத்தை ட்ரோல் செய்யாதவர்களே கிடையாது. அன்புக்கு அப்புறம் அடுத்ததாக அர்ச்சனா நெட்டிசன்களிடம் வசமாக சிக்கியது சமீபத்தில் தன்னுடைய யூடியூப் சேனலுக்கு கழிவறையை காட்டி வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.

அதற்கு நெட்டிசன்கள் பலர் படுகேவளமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி தீர்த்தி வந்தனர். இதை கண்டுகொள்ளாமல் பதிலுக்கு பதில் பேசி வந்தார் அர்ச்சனா.

நாளுக்கு நாள் அர்ச்சனா வைத்திருக்கும் சமூக வலைதள பக்கங்களில் அசிங்க அசிங்கமாக கமெண்ட்டுகள், அர்ச்சனா பற்றிய வீடியோக்கள் என பரபரப்பாகி வருகிறார். இதனால் கதறி அழுது இந்த வார்த்தையை பயன்படுத்தி திட்டாதீர்கள் என்று கூறி புலம்பியுள்ளார்.