தக் லைஃப் டிரைலர் பாக்கியலட்சுமி தொடரின் காப்பியா.. வெளுத்து வாங்கும் ரசிகர்கள்
தக் லைஃப்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், உலக நாயகன் என்று அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்துள்ளார்.
வரும் ஜூன் 5 - ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தில் கமல் உடன் இணைந்து சிம்பு நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் என பலரும் நடித்துள்ளனர்.
நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிலும் கமல் ஹாசன், நடிகை திரிஷா உடன் தவறான தொடர்பு வைத்துக்கொண்டு ரொமான்ஸ் செய்யும் காட்சியும், நடிகை அபிராமிக்கு லிப்லாக் கொடுக்கும் காட்சியும் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காப்பியா?
இந்நிலையில், தற்போது இந்த டிரைலரில் இடம் பெற்ற காட்சிகள் பாக்கியலட்சுமி தொடரில் இடம் பெற்ற சில காட்சிகளுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
Baakiyalakshmi kai vechirukaru mani sir pic.twitter.com/DCJP8QOKUe
— . (@Knot_e_boy1) May 17, 2025