ரயிலில் வைத்து உதைத்த தந்தை!! பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை உருக்கம்...
பிக்பாஸ் மலையாள சீசன் 7
பிக்பாஸ் மலையாள சீசன் 7 நிகழ்ச்சி தற்போது கடுமையான சண்டையோடும் மனதை உருக்கும் வாழ்க்கை கதைகளோடும் கலந்து உணர்ச்சிகள் நிறைந்த நிகழ்ச்சியாக சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த வார எபிசோட்டில் வைல்ட் கார் எண்ட்ரி கொடுத்த வேத் லட்சுமி, தன் வாழ்க்கையில் நடந்த துயரமான சம்பவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அதில் லட்சுமி கூறியது, எனக்கு 10 வயதாக இருக்கும்போது என் அப்பாவுக்கு பரனாய்டு ஸ்கிசோஃபிரினியா என்ற மனநல பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டது. நான் பட்டப்படிப்பை முடிக்கும் வரை, எனக்கு 23 வயதாகும் வரை என் பெற்றோர்கள் ஒன்றாகவே வாழ்ந்து வந்தனர்.
அதன்பின் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் இருவரும் தனித்தனியாக வாழத்தொடங்கினர். ஒரு நாள் நான் என் தந்தையுடன் என் பப்படிப்பு சான்றிதழை வாங்க பெல்காம் சென்றிருந்தபோது என்னுடைய பல்கலைக்கழகம் கர்நாடகாவின் பெல்காமில் இருந்தது. நாங்கள் ரயிலில் பயணம் செய்தோம்.
ரயிலில் வைத்து உதைத்த தந்தை
என் தந்தையுடன் பயணம் செய்வதால், நான் பணத்தையும் எடுத்துச்செல்லவில்லை. என்னிடம் இருந்ததெல்லாம் நான் அணிந்திருந்த கோல்ட் செயின் மட்டும் தான். நாங்கள் பாதிதூரம் சென்றபோது என் அப்பா என்னை முற்றிலுமாக தவிர்க்கத்தொடங்கினார். என் அப்பாவும் அம்மாவும் பிரிந்து வாழத்தொடங்கிய போது நான் என் அம்மாவிற்கு ஆதரவாக இருந்தேன் என்பதால் என்மீது கோபத்தை வெளிப்படுத்தினார்.
கோபத்தின் உச்சிக்கு சென்றவர், என்னை ரயிலில் உதைத்தார். என் அப்பா என்னை மிகவும் மோசமாக நடத்தினார். இந்த உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தமான நபரான என் அப்பா தான். என் அம்மாவுக்கு நான் தான் ரொம்பவே பிடிச்ச ஆள். ஆனா, அப்பா அம்மா பிரிந்து வாழும் போது நான் அம்மாவோட இருந்ததால் அப்பா எங்களுக்கு துரோகமா இருந்தார். அந்த பயணத்தின்போது நான் பல பிரச்சனைகளை சந்தித்தேன்.
நான் மங்களூரில் இறங்கவேண்டும், இதற்கிடையில் காசர்கோட்டில் இறங்க வேண்டிய ஒரு சக பயணி, நான் அழுதுக்கொண்டிருப்பதை பார்த்து, நான் ரயிலிலிருந்து குதித்துவிடுவேனோ என்று பயந்து காசர்காட்டில் இறங்காமல் மங்களூர் வரை என்னுடன் வந்தார். அந்த பயணம் என் வாழ்க்கையை மாற்றியது. நான் என் அம்மாவையும் தங்கையையும் மட்டுமே மனதில் கொண்டு என் வாழ்க்கையை வாழ்ந்தேன்.
நான் அனுபவித்த அதே சூழ்நிலையை அவர்கள் சந்திக்கக்கூடது என்பதில் கவனமாக இருந்து, இவ்வளவு கஷ்டங்கள் இருந்தபோதிலும் என் கனவுகளை ஒருபோதும் கைவிடவில்லை என்று உருக்கத்துடன் பேசியிருக்கிறார் வேத் லட்சுமி. அவரின் பேச்சை கேட்டு சக போட்டியாளர்கள் கண்ணீர்விட்டு அழுது அவருக்கு ஆறுதலளித்தனர்.