மாதவனை கூண்டோடு ஒழிக்க திட்டம் போட்ட நடிகர்.. கடைசியில் கர்மாவால் காணாமல் போன அவலம்
90-களில் சாக்லேட் ஹீரோவாக வலம் வந்தவர்கள் மாதவன் மற்றும் அப்பாஸ். இவர்கள் இருவருக்கும் பெண் ரசிகர்கள் அதிகம். மாதவன் சினிமா துறையில் வருவதற்கு முன்பே அப்பாஸ் பல படங்களில் நடித்து வந்தார்.
இவர்கள் இருவரும் சேர்ந்து "ரிலாக்ஸ்" என்ற படத்தில் நடித்து வந்தனர். அப்போது இருவருக்கு சமமான ரோல் கொடுத்தனர் இருப்பினும் அப்பாஸ், மாதவன் நடித்துள்ள காட்சிகளை குறைத்தார்.
கர்மா
அதன் பின்னர் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான மின்னலே படத்தில் மீண்டும் அப்பாஸ் மற்றும் மாதவன் இணைந்தனர். ஆனால் இந்த படத்தில் மாதவன் தான் ஹீரோவாக நடித்திருப்பார். அப்பாஸ் சில காட்சிகளில் மட்டும் நடித்திருப்பார்.
இது குறித்து பேசிய அப்பாஸ், "நான் மின்னலே படத்தில் பல காட்சிகளில் நடித்திருப்பேன். ஆனால் அதை எல்லாம் நீக்கிவிட்டார்கள்" என்று கூறியுள்ளார். கடைசியில் அப்பாஸை காட்டிலும் மாதவன் தான் பெரிய நடிகராக உயர்ந்தார்.
