பிரபல நீதிபதி பிராங்க் கேப்ரியோ மரணம்!! அவரின் கடைசி வார்த்தை என்ன தெரியுமா?
நீதிபதி பிராங்க் கேப்ரியோ
கோர்ட் ரூம் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பல வழக்குகளை பரிவுடனும் மனிதாபிமானத்துடனும் கையாளும் விதத்தாலும் உலகம் முழுவதும் உள்ள மக்கள் மனதை ஈர்த்தவர் தான் நீதிபதி பிராங்க் கேப்ரியோ. அமெரிக்காவில் உள்ள ரோட் தீவை சேர்ந்த பிராங்க் கேப்ரியோ கனிவான விசாரணையை மேற்கொண்டு உலகறியப்பட்டவர்.
அவரின் வீடியோ இணையதளங்களில் வெளியாக பரவி வைரலாகும். இந்நிலையில் அவரின் 88வது வயதில் கணையத்தில் புற்றுநோய் ஏற்பட்டு நீண்ட போராத்திற்கு பின் உயிரிழந்துள்ளார்.
கடைசி வார்த்தை
இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்பவர்களுக்காக இறப்பதற்கு முன் படுத்தபடுக்கையில் எடுத்த வீடியோவை பகிர்ந்து மரணித்துள்ளார், பிராங்க் கேப்ரியோ.
அந்த பதிவில், ஒரு மரியாதைக்குரிய நீதிபதியாக மட்டுமில்லாமல் அர்ப்பணொப்புள்ள கணவர், தந்தை, தாத்தா, கொள்ளு தாத்தா, நண்பராகவும் நினைவுகுறப்படுவார் என்று கூறப்பட்டு, அவர் பேசிய வீடியோவும் இணைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்
அதில் பிராங்க் கேப்ரியோ, கடந்த ஆண்டு நீங்கள் எனக்காக பிராத்திக்க வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொண்டேன். நீங்கள் நிச்சயமாக செய்தீர்கள். ஆனால் நான் கடுமையான சூழலை கடந்து வருகிறேன். உடல்நலத்தில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டு இப்போது மருத்துவமனையில் இருக்கிறேன்.
மீண்டும் உங்களிடம் எனக்காக வேண்டிக் கொள்ளுமாறு கேட்கிறேன். உங்களால் முடிந்தால் உங்கள் பிராத்தனைகளின் போது என்னை நினைவு கொள்ளுங்கள். நான் பிராத்தனைகளின் சக்தியை முழுமையாக நம்புகிறவன், நமக்கு மேலில் இருக்கும் எல்லாம் வல்லவர் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அதனால் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என்று அந்த வீடியோவில் மறைந்த நீதிபதி பிராங்க் கேப்ரியோ கேட்டுக்கொண்டிருக்கிறார். தற்போது நீதிபதி பிராங்க் கேப்ரியோ, நீதிமன்றத்தில் குற்றவாளிகளுடன் உரையாடி பல வீடியோக்களை அவரது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.