பேசாம நம்ப கல்யாண கேசட்டை நெட்ஃபிளிக்ல வித்து Netflix-ல காசு கேட்போமா? வைரல் மீம்ஸ்..
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி
இந்திய சினிமா பிரபலங்களின் திருமணங்களை பார்க்க ஒரு ரசிகர்கள் பட்டாளமே இருக்கும். அப்படி பிரம்மாண்டமாக நடக்கும் நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்களின் போன்றவர்களின் திருமணத்தை வைத்து அவர்கள் காசு பார்த்து வருகிறார்கள்.
சமீபத்தில் கூட நடிகை நயன் தாரா, விக்னேஷ் சிவனுடனான திருமணத்தை பிரம்மாண்ட முறையில் நடத்தி அதன் வீடியோவை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விற்றிருக்கிறார். 25 கோடிக்கு விற்கப்பட்ட நயன் தாராவின் திருமணம் ஆவணப்படமாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்தது. இது சம்பந்தமாக தனுஷுக்கும் நயனுக்கும் இடையில் பிரச்சனை நடந்தும் வருகிறது.
கல்யாண கேசட்
அவரை தொடர்ந்து, விரைவில் நடக்கவுள்ள நாக சைதன்யா - சோபிதா திருமணத்தின் வீடியோவை 50 கோடிக்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக சில தகவல் வெளியானது.
இதனால் கடுப்பாகிய
நெட்டிசன்கள் தங்கள் திருமண கேசட்டை
ஆவணப்படமா எடுத்து நெட்ஃபிளிக்ஸ் கிட்ட
விற்று காசு பார்க்கலாமா என்று புலம்பி
மீம்ஸ்களை பகிர்ந்து வருகிறார்கள்.