அஜித்தை விட விஜய் இப்படிப்பட்டவரா!! உண்மையை கூறிய பிரபல நடிகர்..
தமிழ் சினிமாவில் இரு துருவ நட்சத்திரங்களாக திகழ்ந்து கொடிக்கட்டி பறந்து வருபவர்கள் அஜித் விஜய். ரஜினிகாந்த், கமல் ஹாசனுக்கு பிறகு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றிருக்கும் இருவரை பற்றியும் சினிமா பிரபலங்கள் புகழ்ந்து தள்ளி பேசுவது வழக்கம்.
அப்படி அவர்களுடன் பழகியும் பணியாற்றிய அனுபவங்கள் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்ற விவரத்தையும் பேட்டிகளில் கூறுவார்கள். அந்தவகையில் நடிகர் அஜித்தின் நெருங்கிய நண்பரும் நடிகருமான ஜி மாரிமுத்து, சித்ரா லட்சுமணன் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்து பல விசயங்களை பகிர்ந்துள்ளார்.

அஜித்
அஜித் சினிமாவில் இப்படி வருவார் என்று நான் நம்பவில்லை. ஆனால் அது அவரின் வெற்றிக்கு காரணம் அவரது நல்ல குணமும் உழைப்பும் தான் காரணம். அப்போதெல்லாம் நாளை என்ன பண்ணலாம் என்று சேமிப்பதை வைக்கமாட்டார்.
ஆசை படத்தில் முதலில் 15 ஆயிரம் பேசப்பட்டு 25 பேசி வாங்கினார். அப்போது வாங்கிய அஜித் இப்போது 60, 70 கோடி சம்பளம் வாங்குகிறார். ஒரு பறந்த மனசுடன் தனக்குன்னு இருக்க மாட்டார். தியாக குணம் கொண்டவர்.
சேர்த்தும், ஒளித்து வைத்துக்கொள்ளும் குணம் அஜித்திற்கு கிடையாது. எங்களை கூட்டிச்சென்று பீர் எல்லாம் வாங்கி கொடுப்பார். ஷாலினியை திருமணம் செய்த பிறகு கொஞ்சம் குடும்பத்திற்காக மாறியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

விஜய்
விஜய் எப்படி என்றால் நிதானம் கொண்டவர். உள்ளுக்குள் என்ன இருப்பதை யாரிடமும் காட்டாதவர். ஆனால் அஜித் அதை வெளிப்படையாக கூறிவிடுவார். விஜய் ஒருவர் மீது கடும் கோபம் இருந்தாலும் அவரிடம் சகஜமாக பேசுவார்.
அடிப்படை ஒழுக்கம் உள்ளவர். அதிகமாக டயலாக்கை படிப்பார். சுதந்திரமுள்ள ஹீரோவாக காட்டிக்கொண்டதில்லை. ஒழுக்கம், நடனத்தில் என்ன செய்வது என்று விருப்பத்துடன் மாஸ்டரிடம் கத்துக்கிட்டார்.
சூர்யா
சூர்யா, ஆரம்பத்தில் தடுமாற்றம் இருந்தது. ஒழுக்கத்துடன் தான் சிவக்குமார் சூர்யாவை வளர்த்திருக்கிறார். சிம்ரனை கட்டிப்பிடித்து நடிக்கும் போது தயங்கினார் சூர்யா. அப்படி ஒருமுறை கார்ட்மெண்ட்சில் வேலை செய்யும் போது நடிக்க போவதாக கூறி அங்கிருப்பவர்களிடம் கூறியுள்ளார்.
ஆனால் அவர்களை நம்பாத அவரது நண்பர்கள், கிண்டல் செய்துள்ளார்களாம். 3 வருடமாக தான் சிவக்குமாரின் மகன் என்பதை கூறாமல் இருந்துள்ள சூர்யா, அப்போது கூறியிருக்கிறார்.
என்னதான் கலைக்குடும்பத்தில் பிறந்தாலும், சினிமாவை சம்மந்தமில்லாமல் தான் வளர்ந்திருக்கிறார். சூர்யாவையும் ஜோதிகாவையும் சேர்த்து வைத்த பெருமை எனக்கும் உண்டு என்று ஜி மாரிமுத்து கூறியிருக்கிறார்.