என்னை மாதிரி மார்ப் செய்தார்கள்.. 3 நாள் தூங்கல!! சீரியல் நடிகை கேப்ரியல்லா ஓப்பன் டாக்
கேப்ரில்லா
தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 3 படத்தில் தங்கை ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை கேப்ரில்லா. இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வந்த கேப்ரில்லா, ஜோடி நம்பர் 1 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னாராகினார்.
அதன்பின் ஜோடி சீசன் 6 டைட்டில் வின்னராகி, பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். 102 நாட்கள் இருந்த கேப்ரில்லா 5 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினார். மாடர்ன் லுக் பின் ராஜா ராணி 3 சீரியலில் நடித்தார். இதனை தொடர்ந்து ஈரமான ரோஜா 2வில் முக்கிய ரோலில் நடித்தார். தற்போது மருமகள் என்ற சீரியலில் ஆதிரையாக நடித்து வருகிறார்.
மார்பிங்
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், என்னுடைய உடம்பை நான் தேர்ந்தெடுக்க முடியாது, எனக்கு இந்த மாதிரி உடல்வாகு வந்திருச்சு. நான் நார்மல் ட்ரெஸ் போட்டாலும் மாடர்ன் ட்ரெஸ் போட்டாலும் கமெண்ட் செய்ய ஆட்கள் இருக்கு, எல்லாவற்ரையும் ஆபாசமாக பார்க்க இங்கு ஆட்கள் இருக்காங்க.
நான் யாரையும் கண்டுக்கொள்வதில்லை, ஒரு கமெண்ட் கூட படிக்கவேமாட்டேன். ஸ்கூல் படிக்கும் போது எனது அப்பா எனக்கு ஒரு ட்ரெஸ் வாங்கி கொடுத்து அதை போட்டுட்டு போனபோது அதையும் கமெண்ட் பண்ணாங்க. 10ஆம் வகுப்பு படிக்கும்போது முழுக்க முழுக்க படிப்பில் தான் கவனம் செலுத்திட்டு இருந்தேன்.
என் புகைப்படத்தை மார்பிங் செய்த போட்டோ வைரலானது. எனக்கு அது ஒருவேளை நான் தானோன்னு தோண ஆரம்பித்தது. வீட்டில் அம்மா செம அடி, நான் ஸ்கூல் போகாமல் 3 நாட்கள் தூங்காமல் அழுதேன், எல்லோரும் என்னை அப்படி பார்த்தார்கள்.
என் அம்மாவை கூட்டிக்கொண்டு ஸ்கூல் பிரின்ஸ்பலிடம் தெரிவித்தேன் சிலர் நம்பினார்கள் உண்மையான நண்பர்கள் அப்படி எதுவும் நினைக்கவில்லை. அதன்பின் இந்த விவகாரத்தை எப்படி டீல் செய்யனும் என்ற தைரியம் வந்ததாக கேப்ரியல்லா பகிர்ந்துள்ளார்.