13 ஆண்டுகளாக ரிலேஷன்ஷிப்!! கமல் ஹாசனை பிரிய ஸ்ருதி ஹாசன் காரணமா? நடிகை கெளதமி பதில்..

Kamal Haasan Gautami Shruti Haasan Gossip Today Akshara Haasan
By Edward Aug 07, 2024 12:30 PM GMT
Report

நடிகர் கமல் ஹாசன் முதன் முதலில் காதலித்து திருமணம் செய்துகொண்டவர் வாணி கணபதி. 10 ஆண்டுகள் சேர்ந்த வாழ்ந்து வந்த நிலையில், 1988ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர். இதன்பின் நடிகை சரிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் நடிகர் கமல் ஹாசன்.

13 ஆண்டுகளாக ரிலேஷன்ஷிப்!! கமல் ஹாசனை பிரிய ஸ்ருதி ஹாசன் காரணமா? நடிகை கெளதமி பதில்.. | Gautami Open Her Break Up Reason With Kamal Haasan

அதன்பின் ஒருசில நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகர் கமல் நடிகை கெளதமியுடன் சுமார் 13 ஆண்டுகள் லிவ்விங் வாழ்க்கை வாழ்ந்தார். அதன்பின் கடந்த 2016ல் தன் மகள் சுப்புலட்சுமியின் எதிர்காலம் குறித்து கமலிடம் இருந்து விலகி தனியாக சென்றார். இந்த சம்பவம் இப்போது வரை கமலுக்கு மிகப்பெரிய விமர்சனத்தை கொடுத்து வருகிறது.

கெளதமி ஏன் கமலை விட்டு பிரிந்தார்? கமல் என்ன தவறு செய்தார்? மகளுடன் அவரைவிட்டு வெளியேற என்ன காரணம்? என்று பல கேள்விகள் எழுந்தது. அதிலும் இவர்கள் பிரிவுக்கு காரணம் கமல் மகள் ஸ்ருதி ஹாசன் எனவும் பேச்சுக்கள் அடிப்பட்டது.

13 ஆண்டுகளாக ரிலேஷன்ஷிப்!! கமல் ஹாசனை பிரிய ஸ்ருதி ஹாசன் காரணமா? நடிகை கெளதமி பதில்.. | Gautami Open Her Break Up Reason With Kamal Haasan

இதற்கு கெளதமி சில ஆண்டுகளுக்கு முன் பழைய பேட்டியில் விளக்கம் கொடுத்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது. அக்ஷரா, ஸ்ருதி ஹாசன் இருவரும் அற்புதமான பெண்கள், சிறுவயதில் இருந்தே அவர்களை பார்த்து வருகிறேன்.

எங்கள் பிரிவுக்கு அவர்கள் இருவரும் எந்த விதத்திலும் காரணம் இல்லை. கமலின் கமிட்மெண்ட்ஸ் மற்றும் என் சுய மரியாதையை விட்டுக்கொடுக்க முடியாத காரணம் தான் நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டோம் என்று கெளதமி கூறியிருக்கிறார்.

You May Like This Video