லண்டணில் பயிற்சி!! ஹீரோயினாகும் நடிகை கெளதமியின் மகள் சுப்புலட்சுமி..
தென்னிந்திய சினிமாவில் 80, 90 களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்து முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்ட பலருடன் ஜோடிப்போட்டு நடித்து டாப் இடத்தில் இருந்தார் நடிகை கெளதமி. 1998ல் சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்த கெளதமி சுப்புலட்சுமி என்ற மகளை பெற்றெடுத்தார்.
அதன்பின் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 13 ஆண்டுகளாக திருமண வாழ்க்கைக்கு பின் விவாகரத்து பெற்று பிரிந்ந்தார். அதன்பின் கமல் ஹாசனுடன் லிவ்விங் வாழ்க்கை வாழ்ந்து பல ஆண்டுகள் வாழ்ந்தார்.
பின் 13 ஆண்டுகளுக்கு பின் மகளின் எதிர்காலம் குறித்து கமலைவிட்டு பிரிந்து தன் மகளுடன் வாழ்ந்து வருகிறார். தன் மகள் சுப்புலட்சுமியை லண்டனில் நடிப்பு குறித்த படிப்பை படிக்க வைட்தார்.
ஆறு மாதம் தங்கி பயிற்சி பெற்ற சுப்புலட்சுமி விக்ரமின் மகன் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறாராம். ஆனால் இது உறுதியாகாத நிலையில், கெளதமி மகள் விரைவில் கதாநாயகியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.



