இதெல்லாம் தேவை இல்லாத படம்!! அந்த மாதிரி இயக்குநர்களை வம்புக்கு இழுத்த கெளதம் மேனன்..

Gossip Today Gautham Vasudev Menon Tamil Directors
By Edward Jan 26, 2025 08:30 AM GMT
Report

கெளதம் வாசுதேவ் மேனன்

முன்னணி இயக்குநராக தமிழ் சினிமாவில் டாப் இடத்தில் இருந்து வருபவர் இயக்கநர் கெளதம் வாசுதேவ் மேனன். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், எனக்கு இந்த படஙளை எல்லாம் குறை சொல்லனும் என்று ஒன்றும் இல்லை.

சாதியை வைத்து மக்களை இரண்டு தரப்பாக பிரிக்கும் மாதிரியான படங்கள் மேல் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால் அது இன்று இல்லை என்று எல்லோருக்கும் தெரியும்.

இதெல்லாம் தேவை இல்லாத படம்!! அந்த மாதிரி இயக்குநர்களை வம்புக்கு இழுத்த கெளதம் மேனன்.. | Gautham Menon Caste Films That Divide People Two

இந்த காலக்கட்டத்தில் அவர்களால் படம் பண்ண முடியாது. அதனால் தான் அவங்க 80களில் அல்லது 90-களில் கதை நடப்பது போல் காட்டுக்கிறார்கள். இது ரொம்பவே அதிகப்படியான காட்சிகளை வெளிப்படுத்தும் என்று எனக்கு தோணும்.

இந்தமாதிரி கதைகளோ படங்களோ இந்த காலக்கட்டத்துக்கு சொல்ல வேண்டிய தேவை இல்லன்னு நான் நினைக்கிறேன். அதை இப்போது நாம் பண்ணவும் முடியாது.

அதனால் தான் இன்னமும் பழைய கதையையே சொல்லிட்டு இருக்கிறோம் என்று சாதி பற்றி எடுக்கும் இயக்குநர்களை சீண்டி பேசியுள்ளார் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன்.