மகள் சுப்புலட்சுமி பெயரை மாற்றும் நடிகை கெளதமி.!! என்ன காரணம் தெரியுமா..
தமிழ் சினிமாவில் 80, 90களில் டாப் நடிகையாக திகழ்ந்து முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்ளிட்டவர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து பிரபலமானார் நடிகை கெளதமி.
நடிகர் கமல் ஹாசனுடன் லிவ்விங் வாழ்க்கையில் இருந்தார். தன் முதல் கணவருக்கு பிறந்த மகள் சுப்புலட்சுமியின் எதிர்காலத்தை நினைத்து கமலிடம் இருந்து 13 ஆண்டுகளுக்கு பின் பிரிந்தார்.
தற்போது அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகை கெளதமியின் மகள் சுப்புலட்சுமி, லண்டனுக்கு சென்று ஆறு மாத கோர்ஸ் முடித்துவிட்டு சென்னை வந்திருக்கிறார். மகளை சினிமாவில் அறிமுகம் செய்ய போட்டோஷூட்டையும் எடுக்க வைத்தார் கெளதமி.
நிச்சயம் சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் மகளின் பெயரை சினிமாவிற்காக மாற்றவிருக்கிறாராம். மேலும் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தில் தான் சுப்புலட்சுமி நாயகியாக அறிமுகமாக பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறதாம்.