விஷாலை பார்த்து நடிகைகள் ஓடுகிறார்களா? பரபரப்பை ஏற்படுத்தி நடிகை காயத்ரி..

vishal psbb gayathriraghuram
By Edward May 29, 2021 05:05 PM GMT
Report

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸை தாண்டி பெரிதாக பேசப்படும் விவகாரம் பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் தான். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகையில், பலர் சமுகவலைத்தளத்தில் கோபமாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அப்படி தமிழ் சினிமாவின் நடிகர் விஷால் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

பிஎஸ்பிபி என்னை பயமுறுத்துகிறது. பள்ளி மூடப்பட வேண்டும் என்றும், பாதிக்கபட்ட மாணவர்களிடம் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை. இதுபோன்ற குற்றங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

இதற்கு பலரும் கருத்துக்களை தெரிவித்தநிலையில், நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான காயத்ரி ரகுமான் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். சினிமாத்துறையில் இருக்கும் நீங்கள் முதலில் அங்கு நடப்பதை பற்றி கவனியுங்கள். புதிதாக வரும் இளம் பெண்களுக்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள்.

பெண்களுக்கு எதிராக நடக்கும் துன்புறுத்தல்களை கண்டியுங்கள். எப்போது உங்கள் நண்பர்களுடன் இருக்கும் நீங்கள், பல பெண்கள் உங்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நீங்கள் அவர்களை நடத்துவதை பார்த்து உங்கள் செயலை பார்த்து பல பெண்கள் ஓடுகிறார்கள் என்று குறிப்பிட்டு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.