400 புடவை கலெக்ஷன்ஸ்.. ஒன்னு மட்டும் கிட்னிக்கு சமம்!! சென்சேஷனல் நடிகை கிரிஜா..
கிரிஜா ஓக்
சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் திடீரென ட்ரெண்ட்டாகி மிகபெரியளவில் பிரபலமானவர் தான் பிரபல மராத்தி நடிகை கிரிஜா ஓக். இந்தியில் பல படங்களில் நடித்துள்ள 38 வயதான கிரிஜா, 15 வயதில் சினிமாவில் அறிமுகமாகினார்.

மராத்தி மொழியில், கோஷ்தா சோட்டி டோங்க்ரேவடி, குல்மோஹர், மானினி, அட்குலா மட்குலா போன்ற பல படங்களில் நடித்திருந்தார். ஜீ மராத்தியில் வெளியான லஜ்ஜா என்ற தொடரில் மனஸ்வினி தேசாய் என்ற ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் கிரிஜா. சமீபத்தில் அவரது புகைப்படங்கள் டிரெண்டானதை அடுத்து, தன்னிடம் எத்தனை புடவைகள் இருப்பது குறித்து பகிர்ந்துள்ளார் கிரிஜா.

கிட்னிக்கு சமம்
அதில், தன்னிடம் 400 புடவைகள் இருக்கிறது. இந்த புடவைகள் அவரது அம்மா மற்றும் பாட்டியிடமிருந்து பெற்றேன். நாடு முழுவதும் இருந்து புடவைகளை வாங்கியுள்ளேன். இந்த புடவைகள் நெசவாளர்கள் மற்றும் கைவினை கலைஞர்கள் மூலம் பெறப்பட்டது.
60 - 70களில் உள்ள தன் பாட்டி கொடுத்த புடவை எனக்கு மிகவும் பிடித்த புடவை. இந்த புடவையின் விலை சில கிட்னீக்களின் மதிப்புகளுக்கு சமம் என்று கூறியிருக்கிறார்.