காந்தாரா பட நடிகருடன் நெருக்கமான காட்சி.. அனுபவத்தை பகிர்ந்த ட்ரெண்டிங் நடிகை கிரிஜா
சமீபத்தில் வெளிவந்த பேட்டியின் மூலம் நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார் கிரிஜா. இவர் மராத்தி மொழியில் நடிக்க துவங்கி பின் ஹிந்தியிலும் களமிறங்கினார்.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பான CID சீரியலில் இவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நடிகை கிரிஜா 'தெரபி ஷெரபி' என்கிற வெப் தொடரில் நடிகர் குல்ஷனுடன் ஒரு நெருக்கமான காட்சியில் நடித்த அனுபவத்தை பற்றி நடிகை கிரிஜா மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் பேசுகையில், "காட்சிக்கு முன் நீங்கள் எவ்வளவு திட்டமிடலும், ஒரு மில்லிகிராம் அளவு கூட அசவுகரியத்தை உணர வைக்காதவர்கள் மிக குறைவுதான். குல்ஷன் அவர்களில் ஒருவர். படப்பிடிப்பின் போது 16 அல்லது 17 முறையாவது, நீங்கள் ஓகே வா.. ஓகே வா என்று கேட்டிருப்பார். அந்த அக்கறை மற்றும் மரியாதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது" என கூறினார்.
கன்னட சினிமா நடிகர் குல்ஷன் தேவையா சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற காந்தாரா சாப்டர் 1 படத்தில் வில்லனாக நடித்து பட்டையை கிளப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.