ஆணவத்தில் ஆடிய இசைஞானி!! தலைக்கனத்தில் இயக்குனரை நம்பவைத்து ஏமாற்றிய இளையராஜா
தமிழ் சினிமாவில் IAS அதிகாரியாக இருந்து சினிமா மீது மோகம் ஏற்பட்டு இயக்குனர் அவதாரம் எடுத்தவர் ஞான ராஜசேகரன். அப்படி குறும்படத்தினை இயக்கி பின் மோகமுள் என்ற படத்தினை இயக்கினார்.

அப்படத்திற்கான இசையை இளையராஜாவிடம் கொடுத்து 175 நாட்கள் ஓடவைத்து ஹிட் கொடுத்தார் ஞான ராஜசேகரன். இதன்பின் முகம், பாரதி போன்ற படங்களை இயக்கி அதிலும் இசைஞானி இசையை புகுத்தினார்.
பாரதி படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. இதனையடுத்து ஒரு கதையை பெரியாரை பற்றி எடுக்கப்போகிறேன் என்று இளையராஜாவை சந்தித்து கூறியுள்ளார்.
அதற்கு இசைஞானி, நீங்கள் படம் எடுக்க போகிறீர்கள் நான் இசைக்காக காசு வாங்கப்போகிறேன் என்று இசையமைக்க படத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார். தயாரிப்பாளரை பிடித்து இளையராஜாவிடன் ஞான ராஜசேகரன் சென்று கேட்டுள்ளார்.
அதற்கு இசைஞானி, பெரியார் பற்றிய படத்தில் நான் எப்படி இசையமைக்க முடியும். அவர் கடவுள் இல்லை என்பார். நான் என் நாவில் சரஸ்வதியை வைத்திருப்பவன், கடவுள் இருப்பதாக நம்புகிறவன்.
அப்படி எப்படி இசையமைக்க முடியும் என்று ஒரு குண்டைத்தூக்கி போட்டுள்ளார். நம்ப வைத்து ஏமாற்றியதால் ஞான ராஜசேகரன் உடனே வித்யாசாகரிடம் கதையை கூற அவரே அதற்கு இசையை கொடுத்திருக்கிறார்.
அப்படம் தேசிய விருதினை தட்டிசென்று இளையராஜாவின் ஆணவத்திற்கு பதிலடி கொடுத்தது என்று கூறியிருக்கிறார் ஞான ராஜசேகரன்.